6 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்: முதியவர் போக்சோவில் கைது

முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
6 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்: முதியவர் போக்சோவில் கைது
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள பகுதியில் முதியவர் ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி வீட்டில் அனைவரும் கீழ் தளத்தில் உறங்கிகொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 5 மணியளவில் அந்த வீட்டில் உள்ள மேல் தளத்தில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது.

உடனே குடும்ப உறுப்பினர்கள் மேலே ஓடி சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது. தனது பேத்தியை மிக மோசமான முறையில் அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த சிறுமியை சிகிச்சைக்காக குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அந்த சூழலை பயன்படுத்தி கொண்ட முதியவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சிறுமி உடல்நலம் சீரான பிறகு, அவளது தந்தை, தனது சொந்த தந்தைக்கு எதிராக நேற்று எழுத்துப்பூர்வ புகாரைப் பதிவு செய்தார். அதன் அடிப்படையில் முதியவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் தனது உறவினரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்குச் சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com