

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பொன்னானி பகுதியை சேர்ந்தவர் முகமது (23) இவரது மனைவி பாத்திமா (21). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
மனைவி பாத்திமா மீது தினமும் சந்தேகப்பட்டுள்ளார். போனில் யாரிடம் பேசினாலும் ஆண் நண்பரிடம் தான் பேசுவதாக சண்டை போட்டு வந்துள்ளார். உறவினர்களிடம் கூட பேச விடாமல் கொடுமை செய்ததாக தெரிகிறது. தனது பெற்றோருக்கு தெரிந்தால் வருத்தபடுவார்கள் என்று இந்த கொடுமை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த28-ஆம் தேதி நள்ளிரவில் வழக்கம் போல மனைவியை எழுப்பி தகராறில் ஈடுபட்ட முகமது கடற்கரைக்கு காற்று வாங்க போகலாம் எனக் கூறி மனைவியை அழைத்துள்ளார். தூக்க கலக்கத்தில் கணவர் படுத்திய கொடுமையால் பொறுமையிழந்த பாத்திமா தூங்கி கொண்டிருந்த குழந்தையுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
கடற்கரையிலும் தனது மனைவியுடன் சண்டையைத் தொடங்கிய முகமது. தூங்கவிடாமல் தகராறு செய்ததால் கோபத்தில் கணவரை எதிர்த்துப் பேசிய பாத்திமா. இதனால் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்த நிலையில் ஆத்திரமடைந்த முகமது, பாத்திமா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்.
அதன் பிறகு மனைவியின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே அதிகாலையில் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணை தொடங்கிய போலீசார் பாத்திமாவின் வீட்டிற்கு நேரில் சென்ற போது அவரது கணவர் முகமது தலைமறைவானது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது தம்பதியிடம் அடிக்கடி சண்டை வரும் என்றும் இரவில் மனைவியைத் தூங்கவிடாமல் முகமது தகராறு செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும் முகமதுதான் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினர்.
அதற்கு ஏற்றாற்போல் பிரேத பரிசோதனையும் கழுத்தை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவே வந்துள்ளது. இதனை அடுத்து முகமதுவை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார். இதற்கிடையே பரப்பனங்காடியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற முகமதுவை தடுத்து நிறுத்திப் பிடித்த ரயில்வே போலீசார்.
அவரை சம்பந்தப்பட்ட காவல் துறையிடம் ஒப்படைத்தனர். முகமதுவை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் மனைவியைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதாக ஒப்புக்கொண்டார்.