பெங்களூருவில் ஓட்டல் அதிபர் தற்கொலை: காரணம் என்ன?

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிரதீப் கடனை திருப்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
பெங்களூருவில் ஓட்டல் அதிபர் தற்கொலை: காரணம் என்ன?
Published on

பெங்களூரு,

பெங்களூரு நாகரபாவி இரண்டாம் கட்டிடம் 12-வது வீதியை சேர்ந்தவர் பிரதீப் ஓட்டல் அதிபர். இவர் ஓட்டல் தொழிலுக்காக நிறைய கடன் வாங்கி உள்ளார். இதனால் தொழிலில் நஷ்டம் . ஏற்பட்டதால் பிரதீப் கடனை திருப்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று பிரதீப் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு தனது காரில் முத்தினப்பள்ளி என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் காரில் இருந்த படியே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் காருடன் அவரும் தீப்பிடித்து எரிந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக கார் தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அப்போது எரிந்த காரில் பிரதீப் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் பிரதீப் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com