இரண்டு அறைகளுக்கு ஒரே ஏசி: ஹோட்டல் நிர்வாகத்தின் பலே ஐடியா...!

இரண்டு அறைகளுக்கு இடையில் ஏசியை வைத்த ஹோட்டலின் நிர்வாகத்தின் செயலை "லெஜண்டரி இன்னோவேஷன்" என சமூக தளவாசிகள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
இரண்டு அறைகளுக்கு ஒரே ஏசி: ஹோட்டல் நிர்வாகத்தின் பலே ஐடியா...!
Published on

மும்பை,

மும்பையை சேர்ந்த அனுராக் மைனஸ் வர்மா என்பவர் வித்தியமான புகைப்படங்களை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மும்பையில் ஒரு ஹோட்டலில் இரவு தங்க சென்றேன்.ஹோட்டல் நிர்வாகத்திடம் ஏ.சி அறைகேட்டேன். ஏற்பாடு செய்தவதாக தெரிவித்தனர்.

இது போன்று வித்தியசமான அறையாக அது இருக்கும் என நினைக்கவில்லை என்றும் நகைச்சுவையிடன் பதிவிட்டுள்ளார்.அதில் இரு அறைகளுக்கு சேர்த்து ஒரே ஏ.சி அமைத்துள்ளது தான் ஹைலைட்.

இது குறித்து அனுராக் மைனஸ் வர்மா மேலும் பதிவிட்டுள்ளதாவது, இந்த ஏ.சியின் ரிமோட் தனக்கு எதுவும் வழங்கப்படாததால் ஏ.சியின் வெப்பநிலையை மாற்றுவது அல்லது அதை அணைப்பது சாத்தியமில்லை என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து வர்மா, ஹோட்டலின் பெயரை வெளியிடவில்லை.இருப்பினும், அவரது டுவிட்டை நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com