பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு


பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2025 10:35 AM IST (Updated: 25 April 2025 11:46 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்

ஸ்ரீநக்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரை சேர்ந்த அடில் ஹுசேன் தோகர், ஆசிப் ஷேக் ஆகிய இரு பயங்கரவாதிகள், 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அடில் ஹுசேன் தோகர், ஆசிப் ஷேக்கின் வீடுகள் நேற்று இரவு பாதுகாப்புப்படையினரால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் மற்றும் அவந்திபுராவில் இருந்த வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story