கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு

அதிகபட்சமாக மராட்டியம் மாநிலத்தில் 1.78 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்வச் செழிப்பு வியத்தகு அளவில் அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டில் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 90 சதவீதம் அதிகரித்து 8.71 லட்சமாக உயர்ந்துள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு -2025 வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவின் செல்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. 1.78 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட மாநிலமாக மராட்டியம்  முன்னணியில் உள்ளது. அதை தொடர்ந்து டெல்லி 79,800 குடும்பங்களுடன் தொடர்ந்து வருகிறது. தமிழகம் (72,600), கர்நாடகா (68,800), குஜராத் (68,300) ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவில் வலுவான செல்வ உருவாக்கத்தை இந்த நிலவரம் காட்டுகிறது.

நாட்டில் 1.42 லட்சம் பணக்கார குடும்பங்களுடன் மும்பை நாட்டின் கோடீஸ்வர தலைநகரமாக உள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) நகரங்கள் உள்ளன. டிஜிட்டல் பணம் செலுத்துதல் (35சதவீதம் யுபிஐ பயன்பாடுகள்), பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளை கோடீஸ்வரர்கள் அதிகம் விரும்புவதாக கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com