

புதுடெல்லி,
எத்தனை வழக்குகளைத்தான் காவிரி விவகாரத்தில் தாக்கல் செய்வீர்கள்? என அரசின் புதிய மனுவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அக். 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்துக்கான 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி மட்டுமே பெறப்பட்டது. அதேநேரம், கா்நாடகத்தின் 4 முக்கிய நீா்த்தேக்கங்களிலும் அக். 27-ல் நீா் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது.
இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி காவிரி நீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், தமிழக தமிழகத்துக்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டர் நிலம் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடக அரசு இப்படி வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எப்படி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டுக்கான உரிய நீரையும் நீதியையும் வழங்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுதரக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ்குமார் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
எத்தனை வழக்குகளைத்தான் காவிரி விவகாரத்தில் தாக்கல் செய்வீர்கள்? என அரசின் புதிய மனுவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தமிழக அரசின் 3 இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3ஆவது மனுவையும் தள்ளுபடி செய்வதாக கூறிய நிலையில், தமிழ்நாடு கோரிக்கையை ஏற்று அந்த 1 மனு மீதான விசாரணை வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.