கடந்த 5 ஆண்டுகளில் வட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள்? - மத்திய மந்திரிக்கு பிரியங்கா கேள்வி

கடந்த 5 ஆண்டுகளில் வட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள் என மத்திய மந்திரிக்கு பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் வட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள்? - மத்திய மந்திரிக்கு பிரியங்கா கேள்வி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக மத்திய மந்திரிகளின் கருத்துகள் சர்சையாகி வருகின்றன.

முன்னதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்க்வார், வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆனால், வட இந்தியாவில் தகுதியான நபர்களுக்குத்தான் பஞ்சமாக உள்ளது என்று கூறினார். அதற்கு வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. வட இந்தியர்களை கங்க்வார் அவமதித்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பிரியங்கா மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் பெரிய விஷயம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே, சில புள்ளிவிவரங்களை தாருங்கள். கடந்த 5 ஆண்டுகளிலும், இப்போது 100 நாட்களிலும் எத்தனை வட இந்தியர்களுக்கு வேலை கொடுத்தீர்கள்? திறன்மிகு இந்தியா திட்டத்தின்கீழ் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது? ஆனால், எத்தனை பேர் வேலை இழந்தனர் என்ற புள்ளிவிவரம், மக்களிடம் இருப்பதை மறக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com