இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்
Published on

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்தது. இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. மொத்தம் 202 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 202- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 54, டெல்லி 54, ராஜஸ்தான் 18, கர்நாடகா 19, தெலுங்கனா 20, கேரளா 15, குஜராத் 14, உத்திரபிரதேசம் 2, தமிழ்நாடு,ஆந்திரா, சண்டிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ஒமைக்ரான் டெல்டா வகையை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும் பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com