வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கம் வரி இல்லாமல் கொண்டு வரலாம்? புதிய விதிகள் அமல்

இந்திய குடிமக்களாக இருந்து வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேல் வசிப்பவராக இருந்தால், 40 கிராம் வரையிலான தங்கத்தை வரியின்றி எடுத்து வர அனுமதி அளிக்கப்படும்.
image credits: Meta AI
image credits: Meta AI
Published on

புதுடெல்லி,

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் இந்திய குடிமக்கள் விமானங்களிலோ, கப்பல்களிலோ விலைமதிப்புமிக்க பொருட்களை எடுத்து வந்தால் அதற்கு சுங்க வரி செலுத்துவது கட்டாயம் ஆகும். எனினும், குறிப்பிட்ட அளவு மதிப்பு வரையிலான பொருட்களுக்கோ தங்க ஆபரணங்களுக்கோ வரி விதிக்கப்படாது. அதாவது தற்போது வரை ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை பயணிகள் தங்கள் உடைமைகளில் கொண்டு வரலாம். அதற்கு எந்த வரியும் கிடையாது. இந்த லக்கேஜ் விதிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மாற்றப்பட்ட இந்த புதிய விதி பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய விதிகளின்படி இந்தியாவில் வசிப்பவர்கள் அல்லது இந்திய சுற்றுலாப் பயணிகள் அல்லது சுற்றுலா விசா இன்றி பிற விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சுங்க கட்டணம் இன்றி எடுத்து வரலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றால் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வரை வரியின்றி எடுத்து வரலாம். உடமை விதிகள் 2016ல் மத்திய நேரடி வரிகள் வாரியம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட விதிகள்தான் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்திய குடிமக்களாக இருந்து வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேல் வசிப்பவராக இருந்தால், 40 கிராம் வரையிலான தங்கத்தை வரியின்றி எடுத்து வர அனுமதி அளிக்கப்படும். ஆண் என்றால் 20 கிராம் வரை நகைகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com