பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரிலே அவர் நீக்கப்பட்டார் என கட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
Published on

புதுடெல்லி

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.

இதில் நேற்று 4-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் வாதங்களை முன்வைத்தார்.

அப்போது அவர், அ.தி.மு.க. தொடங்கிய வரலாற்றை குறிப்பிட்டு தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

இன்று 5 வது நாளாக விசாரணையின் போது அதிமுக கட்சி சார்பாக சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடினார்.அப்போது அவர் கூறினார்.

ஜனநாயக அடிப்படையில், பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியைச் செயல்படாமல் தடுப்பதை ஏற்க முடியாது.

கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் தற்போது பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது

பொதுக்குழு விவகாரத்தில் அனைத்தும் உரிய நடைமுறைப்படி தான் நடைபெற்றது, எனவே அதனை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது என வாதாடினார்

பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரிலே அவர் நீக்கப்பட்டார் என கட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com