தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை: மணிஷ் சிசோடியா

தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை: மணிஷ் சிசோடியா
Published on

புதுடெல்லி,

தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதில் சில புள்ளிகள் இணைக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ல் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே புதிய கல்விக்கொள்கையை அதை டெல்லியில் உடனடியாக அமல்படுத்த முடியாது" என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com