மனித உடலானது 400 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது - யோகா குரு பாபா ராம் தேவ்

மனித உடலானது 400 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் கெடுத்து கொள்கிறோம் என யோகா குரு பாபா ராம் தேவ் கூறினார்.
மனித உடலானது 400 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது - யோகா குரு பாபா ராம் தேவ்
Published on

புதுடெல்லி

12 வது தேசிய தர கூட்டமைப்பில் கலந்து கொண்ட பேசிய யோகா குரு பாபா ராம் தேவ் இன்றைய வேகமான உலகில் தரமான வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை பார்வையாளர்களுக்கு சுட்டி காட்டினார் மேலும் பல யோகாக்களை செய்து காட்டினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மனித உடலானது 400 ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மீறி உங்கள் உடல்களை சித்திரவதை செய்வதால் ஏற்படும் நோய்களால் தனது முடிவை தேடிக்கொள்கிறது.

உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பிற நோய்களால் அதன் வாழ்நாள் காலத்தை குறைக்கிறோம். மேலும் மற்றும் நம் வாழ்வில் எஞ்சியுள்ள காலங்களை டாக்டர்கள் மற்றும் மருந்துகளை சார்ந்து கழிக்கிறோம்.

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் மற்றும் மருந்துகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மக்களை கேட்டு கொள்கிறேன்.

நான் நேற்று அமிதாஷாவை சந்தித்தேன். மதியம் மற்றும் இரவு உணவிற்கு வேகவைத்த காய்கறிகள் மற்றும் சூப் மூலம் உணவு கட்டுபாடினால் 38 கிலோ எடையை குறைத்து உள்ளார்.

டாக்டர்கள் மற்றும் மருந்துகளிடம் இருந்து விடுதலை பெறுவது குறித்து பற்றி நல்ல தரமான வாழ்க்கை அடைய 3 விஷயங்களை பின்பற்றுங்கள் 6 மணி நேரம் நல்ல தூக்கம், ஒரு மணிநேரம் உடற்பயிற்சி,, ற்றும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com