காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது

சிக்கமகளூரு அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது
Published on

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு டவுன் பிலேகல்ஹள்ளி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் சிலர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின பேரில் வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்றனா. பின்னர் அந்த பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சோந்த சிவண்ணா(வயது 34), அண்ணய்யா(29) மற்றும் தசரதன்(35) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்ததையும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 20 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி வனத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com