சண்டையில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்

சாதனா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
சண்டையில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் சண்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவருடைய மனைவி சாதனா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு, சாதனா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

சம்பவத்தன்று, திடீரென அவர் ஓட்டைப் பிரித்து கணவரின் வீட் டுக்குள் குதித்தார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதில், சாதனாவின் மூக்கை தீபக் கடித்து கால்வாயில் துப்பி விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீபக் கைது செய்யப்பட்டார். சாதனா, சிகிச் சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதே சமயத்தில், தீபக்கின் தாயார் போலீசில் ஒரு புகார் அளித் தார். அதில், சண்டையின்போது தீபக்கின் மர்ம உறுப்பை சாதனா சேதப்படுத்தியதாகவும், பிறகு தரையில் முகத்தை மோதி அவரே காயப்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com