தெலுங்கானாவில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: போலீஸ் வலைவீச்சு

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கொலை
Published on

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா மாவட்டம், யாதவ நகரை சேர்ந்தவர் அனில், இவரது மனைவி ரஜிதா. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கொலை

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஆத்திரமடைந்த அனில் மனைவியின் கை கால்களை கயிற்றால் கட்டினார். பின்னர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து துடிக்க துடிக்க கழுத்தை அறுத்தார். ஏஜிதா வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஈவு இரக்கம் இன்றி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

ரஜிதாவின்அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ரஜிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காகதியா பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணை

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அனிலை தேடி வருகின்றனர். தாய் கொலை செய்யப்பட்டதால் அவர்களது 2 குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com