சமூக ஊடகத்தில் மனைவி பிளாக் செய்த வருத்தத்தில் கணவர் தற்கொலை

வெளிநாட்டுக்கு குழந்தைகளுடன் சென்ற மனைவி சமூக ஊடகத்தில் தன்னை பிளாக் செய்த வருத்தத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சமூக ஊடகத்தில் மனைவி பிளாக் செய்த வருத்தத்தில் கணவர் தற்கொலை
Published on

புதுடெல்லி,

டெல்லியின் கிழக்கு உத்தம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் உமேஷ் தர் திரிவேதி (வயது 41). இவரது மனைவி, கணவரை விட்டு விட்டு, குழந்தைகளை அழைத்து கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.

அதன்பின், உமேஷின் மனைவி, சமூக ஊடகத்தில் தனது கணவரை பிளாக் செய்துள்ளார். இதனால் மனைவியை சமூக ஊடகம் வழியே தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட உமேஷ் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். மொபைல் போனையும் அவர் பிளாக் செய்துள்ளார்.

இந்நிலையில், வீட்டின் மின் விசிறியில் உமேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி பிந்தப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தனது மனைவியுடனான மனகசப்பினால் தற்கொலை முடிவை எடுக்கிறேன் என உமேஷ் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com