ஆபாச வீடியோக்களை காட்டி தோழிகளுடன் உல்லாசமாக இருக்க கணவனை வற்புறுத்திய பெண் என்ஜினீயர்...கண்ணீர் விட்டு கதறிய வாலிபர்

அந்த பெண் மீண்டும் குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆபாச வீடியோக்களை காட்டி தோழிகளுடன் உல்லாசமாக இருக்க கணவனை வற்புறுத்திய பெண் என்ஜினீயர்...கண்ணீர் விட்டு கதறிய வாலிபர்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தொல்லை கொடுப்ப தோடு, ஆபாச வீடியோக்களை காண்பித்து அதுபோலவே தனது தோழிக ளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பெண் என்ஜினீயர் ஒருவர் தனது கணவனை வற்புறுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ஒரு வாலிபர் விசித்திரமான பிரச்சினையால் போலீஸ் நிலையத்தின் படி யேறி இருக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது. அவர் போலீஸ் நிலையத் திற்கு சென்றதும், அவரிடம் போலீசார் என்னப்பா என்ன ஆச்சு? என்று கேட்க, அவர் கூறிய தகவல்கள் போலீசாருக்கே சற்று விசித்திரமாகத் தான் இருந்தது.

அதாவது அவருக்கும், பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில காலங்கள் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் தனது மனைவிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளதை, அந்த தனியார் நிறுவன ஊழியர் அறிந்தார்.

வேலைக்கு செல்லும் அந்த பெண் தினமும் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து கேளிக்கை விடுதி போன்ற இடங்களுக்கு சென்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அறிந்த அந்த தனியார் நிறுவன ஊழியர் தனது மனைவியிடம், மதுப்பழக்கம் குறித்து கேட்டு கண்டித்துள்ளார். அதற்கு அந்த பெண் மது அருந்துவது, நண்பர்களுடன் வெளியில் செல்வது சாதாரணமான ஒன்று என பதில் அளித்துள்ளார். மேலும் இதுபற்றி எல்லாம் கேட்கக்கூடாது என்றும் கட்டளை போட்டுள்ளார்.

மேலும் அந்த பெண் தனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் தன்னுடைய கணவரிடம் கூறி விளக்கி உள்ளார். தான் யார், யாருடன் எல்லாம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன், தன்னுடைய உல்லாச வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். இதனால் மனவேதனையும், ஆத்திரமும் அடைந்த அந்த தனியார் நிறுவன ஊழியர், தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர், அவர்கள் 2 பேருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இனி அவள் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டால் என்று கூறியுள்ளனர். பின்னர் சில மாதங்கள் சரியாக இருந்த அந்த பெண் மீண்டும் குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை தனது கணவரிடமும் கூறியுள்ளார். மேலும் ஆபாச படங்களை கணவருக்கு காண்பிடித்து, தனது தோழிகளுடன் கணவரை உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். அதற்கு மறுத்த கணவரை மீண்டும், மீண்டும் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மனைவியின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த தனியார் நிறுவன ஊழியர், மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ முடிவு செய்தார். ஆகையால் தனது மனைவியிடம், தான் வாங்கி கொடுத்த நகைகளை கேட்டுள்ளார். ஆனால் நகைகளை அந்த பெண் கொடுக்க மறுத்துள்ளார்.

இதன்காரணமாக தனக்கு நீதிகேட்டு அந்த தனியார் நிறுவன ஊழியர் போலீஸ் நிலைய படியேறி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த தனியார் நிறுவன ஊழியர் அளித்த புகாரின்பேரில் அம்ருதஹள்ளி போலீ சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரின் மனைவியை நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

பொதுவாக ஆண்கள் தான் தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியை மனரீ தியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுப்பதையும், கொடூரமான பாலியல் தொல்லை கொடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக பெண் என்ஜினீயர் தனது கணவனுக்கு அது போல் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com