ஜெயிலில் இருந்து வந்த கணவன்... கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட திட்டம்: சினிமா பாணியில் சம்பவம்


ஜெயிலில் இருந்து வந்த கணவன்... கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட திட்டம்: சினிமா பாணியில் சம்பவம்
x

ஜான்சிக்கு தனது தம்பியின் நண்பருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்ட விவகாரம் கணவருக்கு தெரியவந்தது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், பெத்தரவிடு அடுத்த டோர்னாலினாவைச் சேர்ந்தவர் லாலு ஸ்ரீனு (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜான்சி. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு லாரி ஓட்டும்போது கஞ்சா, மது உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையானார். கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் லாலு ஸ்ரீனுவை கைது செய்து ஓங்கோல் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஜான்சிக்கு தனது தம்பியின் நண்பரான ஜிம்மிடோர்னாவைச் சேர்ந்த கார் டிரைவர் சூரிய நாராயணாவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. ஜெயிலில் உள்ள கணவரை பார்ப்பதற்காக ஜான்சி தனது தம்பியுடன் ஜெயிலுக்கு சென்றார். அப்போது லாலு ஸ்ரீனு, மனைவியையும் அவரது தம்பியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

கணவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்தவுடன் தங்களை கொலை செய்து விடுவார் என அச்சமடைந்தனர். இதனால், கணவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே அவரை கொலை செய்து விட வேண்டும் என ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

குண்டூரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கூலிப்படையினரிடம் கணவரை கொலை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி, ரூ.1 லட்சத்தை முன்பணமாக வழங்கினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் லாலு ஸ்ரீனு ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அழைத்து வர ஜான்சி தனது தம்பியுடன் ஜெயில் வாசலில் காரில் காத்திருந்தார். ஜெயிலிலிருந்து வெளியே வந்த கணவரை காரில் அழைத்துச் சென்றனர்.

அவர்களது காரை பின்தொடர்ந்து சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர் வந்தனர். சிமகுத்தி, பொடிலி ஆகிய இரண்டு இடங்களில் கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர்களது திட்டம் கைகூடவில்லை. இதையடுத்து, சிறுநீர் கழிக்க வேண்டுமென லாலு ஸ்ரீனு காரிலிருந்து இறங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜான்சியும் அவரது தம்பியும் பின்புறமாக சென்று கணவரின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவினர்.

காரை பின்தொடர்ந்து வந்த கூலிப்படையினர் லாலு ஸ்ரீனுவை குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டனர். அப்போது ஜான்சி தனது தம்பியுடன் சேர்ந்து கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து லாலு ஸ்ரீனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதலன் சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர், “நீங்கள் இருவரும் போலீசில் சரணடைந்து விடுங்கள். நாங்கள் உங்களை ஜாமீனில் எடுத்து விடுகிறோம்” என தெரிவித்தனர்.

அதன்படி ஜான்சியும் அவரது தம்பியும் போலீசில் சரணடைந்தனர். போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலன் சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஜான்சி ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story