திருமண நாளன்று பரிசு கொடுக்காததால் கணவருக்கு கத்திக்குத்து; இளம்பெண் வெறிச்செயல்

திருமண நாளன்று கணவர் தனக்கு பரிசு தருவார் என்று இளம்பெண் கனவுகளுடன் காத்திருந்தார்.
திருமண நாளன்று பரிசு கொடுக்காததால் கணவருக்கு கத்திக்குத்து; இளம்பெண் வெறிச்செயல்
Published on

பெங்களூரு,

பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது இளம்பெண். இவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் தனிக்குடித்தனம் நடந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 27-ந் தேதி அவர்களுக்கு திருமண நாள் ஆகும். அன்றைய தினம் தனது கணவர் தனக்கு பரிசு தருவார் என்று இளம்பெண் கனவுகளுடன் காத்திருந்தார். ஆனால் அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் தான் அந்த பெண்ணின் கணவர் வீடு திரும்பி உள்ளார்.

மேலும் அவர், தனது மனைவிக்கு திருமண நாள் பரிசையும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கணவனை சரமாறியாக குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண்ணின் கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரின் நலன் கருதியும் போலீசார் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. மாறாக அந்த பெண்ணின் மீது வழக்குப்பதிந்து, அவரை கவுன்சிலிங்கிற்கு போலீசார் அனுப்பி உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com