ஆன்லைனில் ரூ.2,000 கட்டணம்; உல்லாசமாக இருந்த காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பதி


ஆன்லைனில் ரூ.2,000 கட்டணம்; உல்லாசமாக இருந்த காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்த தம்பதி
x
தினத்தந்தி 27 Jun 2025 3:53 PM IST (Updated: 27 Jun 2025 4:06 PM IST)
t-max-icont-min-icon

உல்லாச வீடியோக்களை பார்க்க விரும்பிய சிலர் வீடியோக்களை பதிவிறக்கம் செய்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த அம்பர்பேட்டை சேர்ந்த 40 வயது ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவிக்கு 38 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தம்பதி மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இதற்கு அவருடைய மனைவியும் சம்மதம் தெரிவித்தார்.

இதற்காக தங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரேத்தக அறையில் கேமராக்களை பொருத்தினர். கணவனும் மனைவியும் தங்கள் பாலியல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நேரடியாக காண்பிக்க ஒரு செல்போனில் ஆப் அறிமுகப்படுத்தினர்.உல்லாச வீடியோக்களை பார்க்க விரும்பிய பெருசுகள் முதல் சிறுசுகள் வரை பலர் ஆப்பை பதிவிறக்கம் செய்தனர். கணவன் - மனைவியின் நேரடி உல்லாச காட்சிகளை நேரடியாக பார்க்க ரூ.2,000 சிறிய வீடியோக்களை பார்க்க ரூ.500 என கட்டணமாக தம்பதியினர் நிர்ணயம் செய்தனர்.

இனிப்புக்கு ஈ மொய்ப்பதை போல வீடியோவை பார்க்க பலர் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை அனுப்பி வைத்தனர். வீட்டில் உள்ள தனி அறையில் கணவனும் மனைவியும் முகமூடி அணிந்து உல்லாச லீலைகளில் ஈடுபட்டனர். அதனை ஆன்லைனில் உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதனை பார்த்த பலர் பணத்தை செலுத்தி வந்தனர். இதன் மூலம் தம்பதிக்கு வருமானம் பல மடங்கு கொட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

கணவன் - மனைவியின் வீடியோ லீலை பல மாதங்களாக தொடர்ந்தது. தகவலின் பேரில் போலீசார் அவர்களின் வீட்டை சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் அறையில் பொறுத்தி இருந்த உயர் ரக கேமராக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story