ஐதராபாத்: மருந்து தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு


ஐதராபாத்: மருந்து தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
x

ஆஸ்பத்திரியில் 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பயங்கர வெடிவிபத்து நடந்தது. இந்த விபத்தில் நேற்று முன்தினம் வரை 40 பேர் பலியாகினர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

1 More update

Next Story