நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அறிக்கை

பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் போலி என்கவுண்டரில் கொல்லபட்டதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய ஐதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அறிக்கை
Published on

புதுடெல்லி

ஐதராபாத்தில் பெண் கால்நடை டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் கால்நடை டாக்டரை பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்திய நான்கு பே, அவரை கொலை செய்து அவரின் உடலை எரித்தனா. அவாகள் நால்வரையும் கைது செய்த காவல்துறையினா, அனைவரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா.

இந்த என்கவுண்ட்டா குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி வி.எஸ்.சிபுகா தலைமையில் 3 பே விசாரணை ஆணையத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. 6 மாதத்தில் அறிக்கை சமாப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பிறகு, விசாரணை ஆணையத்துக்கு மூன்று முறை கால அவகாச நீட்டிப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அதன் பின், விசாரணை அறிக்கையை சமாப்பிக்க விசாரணை ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமாவு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை ஆணையம் அறிக்கை சமாப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனா.

இந்நிலையில், தற்போது ஐதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம் போலியானது எனவும் குற்றம்சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com