காதலனை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: மது குடிக்க வைத்து 15 வயது மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

பள்ளிக்கு சென்ற மகள் இரவு வரை வீடு திரும்பாததால் பதறி போன மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
காதலனை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: மது குடிக்க வைத்து 15 வயது மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
Published on

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், நர்சிங்கி புப்புலகுடாவை சேர்ந்தவர் 15 வயது மாணவி இவர் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி சார்மினாரில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.

அங்குள்ள நடைபாதையில் 16 வயது சிறுவன் ஒருவன் வியாபாரம் செய்து வருகிறார். கடையில் பொருட்களை வாங்கியபோது தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு மாணவியின் செல்போன் எண்ணை அவன் வாங்கினான். பின்னர் தினமும் மாணவிக்கு போன் செய்து பேசி வந்தான். இதனால் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 16-ம் தேதி மாணவிக்கு போன் செய்து சார்மினார் வரக்கூறினார். மாணவி வீட்டில் உள்ளவர்களிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

மாணவி வருவது குறித்து மாணவர் ரெயின் பஜாரை சேர்ந்த பிரபல ரவுடி இம்ரான் கான் (வயது 24) மற்றும் தல கட்டாவை சேர்ந்த 16 வயது நண்பருக்கு போன் செய்து வரவழைத்துள்ளான். 3 பேரும் மாணவியை .சார்மினாரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். மாணவியையும் வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். மாணவி மதுபோதையில் இருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி 3 பேரும் மாறி மாறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பள்ளிக்கு சென்ற மகள் இரவு வரை வீடு திரும்பாததால் பதறி போன மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். மகளை கண்டு பிடிக்க முடியாததால் இது குறித்து நர்சிங்கி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மாணவி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இம்ரான் கான் மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உள்ள் சிறுவனை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் இம்ரான் கான் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com