திருமணத்திற்கு முன்பு உல்லாசம்: காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இளம்பெண் பலி

கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த நாகசாய் என்பவருடன் ஏற்பட்ட காதலால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு உல்லாசம்: காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இளம்பெண் பலி
இளம்பெண்
Published on

ஐதராபாத்,

திருமணத்திற்கு முன்பு உல்லாசமாக இருந்துள்ளனர்; இந்நிலையில் காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இளம்பெண் பலி.

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கும் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த நாகசாய் (வயது 26) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த விபரத்தை மறைத்து இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதல் மற்றும் கர்ப்பம்

கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த நாகசாய் என்பவருடன் ஏற்பட்ட காதலால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். இதில் அந்த இளம்பெண் கர்ப்பமடைந்தார். குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என இளம்பெண் கூறியதால், நாகசாய் அவருக்கு கருத்தடை மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

உடல்நலக்குறைவு

மாத்திரைகளை உட்கொண்ட பிறகு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பின்னர் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மிக மோசமடைந்தது. அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள், உடனடியாக அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு நிலைமை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு இளம்பெண் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் கைது

இதுகுறித்து இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை வழங்கியதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த காதலன் நாகசாயை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com