விளக்கம் போதாது, மன்னிப்பு கோர வேண்டும்: ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிவசேனா எம்.பி கோரிக்கை

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் பதிவிட்ட டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விளக்கம் போதாது, மன்னிப்பு கோர வேண்டும்: ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிவசேனா எம்.பி கோரிக்கை
Published on

மும்பை,

கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து கூறியது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து பணிந்த ஹூண்டாய் நிறுவனம், பாகிஸ்தானில் உள்ள ஹுண்டாய் நிறுவனத்தின் கருத்து பொறுப்பற்றது. வன்மையாக கண்டிக்கிறோம் எனக்கூறியது. எனினும், ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை என சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா சதுர்வேதி, எதற்கு இத்தனை மழுப்பல், நழுவல், கண் துடைப்பு வார்த்தைகள். இவை எல்லாம் தேவையில்லை. நீங்கள் மன்னிப்பு கோருங்கள். மற்றவையெல்லாம் அவசியமற்றது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com