கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் -முதல்வர் குமாரசாமி உருக்கம்

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என சட்டசபையில் முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசினார்.
கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் -முதல்வர் குமாரசாமி உருக்கம்
Published on

பெங்களூரு

சுயேச்சை எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சுயேச்சை எம்எல்ஏக்கள் பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது காங் - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

பெங்களூவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன், நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன்.

நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது தான்.

காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன், அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com