நான் சாதி நடைமுறைகளுக்கு எதிரானவன்- முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

நான் சாதி நடைமுறைகளுக்கு எதிரானவன் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
நான் சாதி நடைமுறைகளுக்கு எதிரானவன்- முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
Published on

பெங்களூரு:-

எப்போதும் எதிரானவன்

கர்நாடக குருப சமூகம் சார்பில் குருப சமுதாய மக்கள் தேசிய மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நான் எப்போதும் சாதிவாதம் குறித்து பேசுபவன் அல்ல. சமூக நீதியே எனது உயிர். வாய்ப்பு மறுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற சங்கம் மூலம் மாநாடுகளை நடத்துவது தவறு அல்ல. அதன்படி இந்த மாநாடு நடக்கிறது. நான் சாதி நடைமுறைகளுக்கு எப்போதும் எதிரானவன். 21-வது நூற்றாண்டிலும் சாதிகள் நீடிப்பது வேதனை அளிக்கிறது.

போராடுவது சரியே

ஆனால் உரிமைகளை பெற சங்கம் அமைத்து கொண்டு போராடுவது சரியே. அவ்வாறு செயல்படாமல் உரிமைகளை பெற முடியாது. குருப சமூகத்திற்கு அரசியல் வரலாறு உள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக வளர்ந்தால் தான் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

நம்முடையது சாதி மற்றும் பாகுபாடுகளால் கட்டமைக்கப்பட்ட சமுதாயம். அதனால் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதிலும் பாகுபாடு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டுமெனில் இத்தகைய மாநாடுகள் நடைபெற வேண்டும். நாங்கள் அமல்படுத்தியுள்ள உத்தரவாத திட்டங்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் கிடைத்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com