

ஸ்ரீநகர்,
மக்களவையில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் துணிச்சலை பாராட்டி பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா சமூக வலைத்தளம் மூலம் பதில் அளித்துள்ளார்.
அதில், இந்தியாவுக்கு ஒரு தேசிய மீசை வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் அபிநந்தன் மீசையுடன் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.