சாதகமான தீர்வு இன்று எட்டப்படும்: வேளாண் துறை அமைச்சர் தோமர் நம்பிக்கை

டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசு இடையே 7-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
சாதகமான தீர்வு இன்று எட்டப்படும்: வேளாண் துறை அமைச்சர் தோமர் நம்பிக்கை
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல், டெல்லி எல்லையில் பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6- சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசு இடையே 7-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான் பவனில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: இன்று சாதகமான தீர்வை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து விஷயங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிப்போம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com