கர்நாடக பா.ஜனதா தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை சி.டி.ரவி பேட்டி

கர்நாடக பா.ஜனதா தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை என சி.டி.ரவி கூறினார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை சி.டி.ரவி பேட்டி
Published on

சிக்கமகளூரு-

கர்நாடக பா.ஜனதா முன்னாள் மந்திரியும், முன்னாள் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி, சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா மேலிடம் எனக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக நிர்வகித்து உள்ளேன். டெல்லியில் எனது அலுவலகம் மற்றும் வீட்டை காலி செய்துவிட்டேன். மாநில பா.ஜனதா தலைவர் பொறுப்பு மிக முக்கியமானது. மாநிலத்துக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். பா.ஜனதா தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை. கட்சி மேலிடம் எனக்கு எந்த பதவி கொடுத்தாலும் அதனை திறம்பட நிர்வகிப்பேன்.

பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மாநில அரசு மீது வெறுப்பில் உள்ளனர். காங்கிரசை தேர்ந்தெடுத்தது தவறு என்று மக்கள் 2 மாதங்களிலேயே புரிந்து கொண்டுள்ளனர். இதுவரை எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சிய சித்தராமையா நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com