என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி டுவீட்

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி டுவீட்
Published on

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்பேது, பிரதமர் நரேந்திர மேடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தெடர்பாக தெடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று இந்தியில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com