ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Published on

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும்ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com