சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது; பிரதமர் மோடி

வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது; பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியதாவது;-

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.

வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் ஏப்.5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com