‘கைகூப்பி கேட்கிறேன்; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்’ - கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா உருக்கமான வேண்டுகோள்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க கைகூப்பி வேண்டுகிறேன் என கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘கைகூப்பி கேட்கிறேன்; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்’ - கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா உருக்கமான வேண்டுகோள்
Published on

பெங்களூரு, ஏப்.23-

2-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முதல்-மந்திரி எடியூரப்பா, காரில் ஏறி செல்வதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கர்நாடக மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்களை நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா உருக்கமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com