ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி வாழ்த்து

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #RajyaSabhaDeputyChairman
ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து புதிய மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் பேட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாத் களம் கண்டார். இதில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே. ஹரி பிரசாத்துக்கு 105 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற்ற ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மேடி உள்ளிட்டேர் வாழ்த்து தெரிவித்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிடிபி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஹரிவன்ஸுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்ட ஹரி பிரசாத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகள் ஆதரவு அளித்தன. இருப்பினும் கலைஞரின் மறைவு காரணமாக திமுக எம்.பி.க்கள் இதில் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்குஜிக்கு இந்த அவை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் பிரதமர் சந்திர சேகர் ஜீக்கும் பிடித்தமானவர் என புகழாரம் சூட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com