‘தவறான குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை’ ராபர்ட் வதோரா சொல்கிறார்

‘தவறான குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை’ என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோரா தெரிவித்துள்ளார்.
‘தவறான குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை’ ராபர்ட் வதோரா சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா கிறிஸ்துமஸ் பண்டிகையை டெல்லியில் ஏழைக் குழந்தைகளுடன் நேற்று கொண்டாடினார்.

இதுபற்றி மகிழ்ச்சி தெரிவித்த அவர், தனது டுவிட்டர் பதிவில் அண்மையில் நில முறைகேடு விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி என்ற நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.

அதில், என் மீது யாரேனும் தவறான குற்றச்சாட்டையோ, பொய்யான தகவல்களையோ கூறினால் அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. இதில் உண்மையை நான் அறிவேன். ஏழ்மையானவர்களுக்கு உதவி செய்வதற்கான அனைத்து உணர்வையும் எனக்கு அளித்திட்ட கடவுளுக்கு நன்றி. அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் எளிமையை கற்றுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com