நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்: அமரீந்தர் சிங் வேதனை

பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரீந்தர் சிங் இன்று மாலை ராஜினாமா செய்தார்.
நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்: அமரீந்தர் சிங் வேதனை
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலகிய பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமரீந்தர் சிங் கூறியதாவது:பேச்சுவார்த்தை நடந்த விதம் என்னை அவமானப்படுத்துவதுபோல் இருந்தது. இன்று காலை காங்கிரஸ் தலைவரிடம் பேசினேன். அப்போது, ராஜினாமா செய்வதாக அவரிடம் சொன்னேன்.

சமீபத்திய மாதங்களில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவது இது மூன்றாவது முறை. அதனால்தான் நான் விலக முடிவு செய்தேன். கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும். இப்போது நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன்.

எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வேன் என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com