‘நான் வீட்டு சிறையில் இருக்கிறேன்’ மெகபூபா முப்தி சொல்கிறார்

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
‘நான் வீட்டு சிறையில் இருக்கிறேன்’ மெகபூபா முப்தி சொல்கிறார்
Published on

ஸ்ரீநகர்,

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நான் இன்று வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறேன். யூனியன் பிரதேச நிர்வாகம் கூறுவது போல காஷ்மீரில் இயல்புநிலை நிலவவில்லை. நான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பது, இயல்பு நிலை நிலவுவாக நிர்வாகம் சொல்லும் பொய்யை அம்பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து கவலைப்படும் மத்திய அரசு, காஷ்மீர் மக்களுக்கு அதே உரிமைகளை நிராகரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் குப்காரில் உள்ள தனது வீட்டின் மெயின் கேட்டை மறைத்தபடி நிற்கும் பாதுகாப்பு படை வாகன படத்தையும் மெகபூபா முப்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com