

புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நன்மைக்காகவே கொண்டுவரப்பட்டன. ஆனால், எங்களின் சிறந்த முயற்சிக்கு பின்னரும் சில தரப்பு விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் குறித்து எங்களால் புரியவைக்கமுடியவில்லை.
விவசாயிகளை வளர்ச்சியடைய வைப்பதே 3 வேளாண் சட்டங்களின் நோக்கம். 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் நான் விவசாயிகளின் கஷ்டங்கள் மற்றும் சவால்களை மிகவும் அருகில் இருந்து கவனித்துள்ளேன். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறை இம்மாதம் தொடங்க உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும்.
போராடும் விவசாயிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்துடன் இணைய வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன். மேலும் புதிய தொடக்கத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றார்.