மோடி ஓய்வு பெறுவது குறித்து கருத்து கூற எனக்கு தார்மீக உரிமையில்லை: சரத்பவார்

பிரதமர் மோடி ஓய்வு பெறுவது குறித்து கருத்து கூற எனக்கு தார்மீக உரிமையில்லை என சரத்பவார் கூறியுள்ளார்.
மோடி ஓய்வு பெறுவது குறித்து கருத்து கூற எனக்கு தார்மீக உரிமையில்லை: சரத்பவார்
Published on

மும்பை,

பா.ஜனதா கட்சியில் 75 வயது நிறைவடைந்தவர்களுக்கு தீவிர அரசியலில் ஓய்வு அளிக்கப்படுகிறது. முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் வயதான பிறகு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். இந்தநிலையில் பிரதமா மோடி நேற்று முன் தினம் அவரது 75-வது பிறந்தநானை கொண்டாடினார். 75 வயதை கடந்துவிட்டதால் பிரதமர் மோடியும் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத்பவாரிடம் பத்திகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- தலைவர்கள் 75 வயதுக்குபிறகு ஓய்வு பெற வேண்டும் என நாங்கள் சொல்லவே இல்லை என தற்போது பா.ஜனதாவினர் கூறுவார்கள். நான் என்ன ஓய்வு பெற்றுவிட்டேனா?. எனக்கு85 வயதாகிறது. எனவே இந்த விவகாரத்தில் கருத்து கூற எனக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com