இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி

இளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்று 2-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com