

மதுரா
நெருக்கடி நிலை காலத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஷோலே படத்தின் காட்சிகள் மிகுந்த கூட்டத்துடன் இருந்ததால் எதிர்க்கட்சிக்காரர்கள் பலர் திரையரங்குற்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து கொள்வார்கள். இதனால் அவர்களை கைது செய்வது காவல்துறைக்கு சிரமமாக இருந்தது என்று விளக்கினார் ஹேமாமாலினி. இதன் மூலம் தானும் ஒரு சிறு பங்களிப்பை செய்தேன் என்று கூறினார்.
நெருக்கடி நிலையின் 42 ஆவது நினைவு கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
நெருக்கடி நிலை துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர் அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அது கொடுமையானதாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.