

அமராவதி,
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஹனுமந்து. இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்துள்ளார். இந்நிலையில், இன்று ஹனுமந்து திடீரென செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு கீழே இறங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவரை கீழே இறங்குமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் அவரோ, ‘எனக்கு கஞ்சா வேண்டும், தயது செய்து ஒரு கஞ்சா பாக்கெட் வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டு அடம்பிடிக்கத் தொடங்கினார்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் ஒருவழியாக ஹனுமந்துவை சமாதானம் செய்து, அவரை கீழே இறங்கி வர வைத்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஹனுமந்து, தீவிர மன அழுத்ததில் இருந்து வந்துள்ளார் எனவும், அதன் காரணமாக அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.