'உன் கூடவே இருக்கணும்’ கர்ப்பிணி மனைவிக்காக கணவன் எடுத்த முடிவு- நெகிழ்ச்சி சம்பவம்


உன் கூடவே இருக்கணும்’ கர்ப்பிணி மனைவிக்காக  கணவன் எடுத்த முடிவு- நெகிழ்ச்சி  சம்பவம்
x

எனது மனைவிக்கு தலைபிரசவம் என்பதால் பக்கத்தில் இருந்து கவனிக்க விரும்பியதாக தனியார் நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

பேறு காலத்தில் கணவன் உடன் இருந்தே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எந்த ஒரு மனைவியின் முதல் விருப்பமாக இருக்கும். அந்த வகையில், மனைவியை கர்ப்ப காலத்தில் உடன் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் 1.25 கோடி சம்பளம் தரும் வேலையை உதறி தள்ளியிருக்கிறார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பெங்களூருவில் தொழில்முறை நிபுணராக இருப்பவர் தான் தனது மனைவிக்காக வேலையை தூக்கி எறிந்துள்ளார். இதுபற்றி அவர் ரெடிட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நான் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினேன். கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த நிறுவனங்களில் சந்தைக்கு செல்லும் குழுக்களை உருவாக்கி வழிநடத்தியுள்ளேன். 7 ஆண்டுகளில் ரூ.7 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளேன். சமீபத்தில் நான் விற்பனை தலைமை பொறுப்பில் பணியாற்றி வந்தேன்.

தற்போது எனது மனைவி 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். எனது மனைவிக்கு தலைபிரசவம் என்பதால் பக்கத்தில் இருந்து கவனிக்க ஆசைப்பட்டேன். இதனால் நான் எனது வேலையை விட்டுவிட திட்டமிட்டேன். எனது மனைவியும் வேலை செய்து வருகிறார். இதனால் மனைவியை ஓராண்டு விடுப்பு எடுக்கும்படி கூறினேன்.அதற்கு எனது மனைவி, வீட்டுக்குள் இருப்பதைவிட வேலைக்கு செல்ல தான் விரும்புகிறேன் என்றார். இதன்காரணமாக மனைவியை கவனிக்கவும், வீட்டு வேலைகளை செய்யவும் நான் ரூ.1.20 கோடி வருமானம் ஈட்டி வந்த வேலையைவிட்டு விலக முடிவு செய்தேன். இதற்கு எனது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி வேலையை தூக்கி எறிந்துவிட்டு மனைவிக்கு நல்ல கணவராகவும், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், மேலும் தனது பெற்றோர், மனைவியின் பெற்றோரையும் கவனித்து வருகிறேன்.

உங்கள் துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு நீங்கள் தேவைப்படும் போது உடனிருப்பது பொன், பொருள், பணத்தைவிட முக்கியமானது. அதை விட உலகில் பெரியது எதுவுமில்லை. அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக சிறப்பான, பொன்னான தருணங்களை நான் இழக்க விரும்பவில்லை. அதனால் தான் நான் வேலையை விட்டுவிட்டு, கர்ப்பமாக இருக்கும் மனைவியை கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மனைவியுடன் நடைபயிற்சி செய்வது, அவருக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story