கர்நாடக குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை அறிந்து மனமுடைந்து போனேன்; காங்கிரஸ் தலைவர் பேச்சு

கர்நாடகாவில் 5 வயதுக்கு உட்பட்ட 35%குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளது எனஅறிந்து மனமுடைந்து போனேன் என்று காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடக குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை அறிந்து மனமுடைந்து போனேன்; காங்கிரஸ் தலைவர் பேச்சு
Published on

பெங்களூரு,

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, நாட்டில் கர்நாடகாவில் 5 வயதுக்கு உட்பட்ட 35 சதவீத குழந்தைகளின் வளர்ச்சி தடைப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கர்நாடகாவில் 5 வயதுக்கு உட்பட்ட 35 சதவீத குழந்தைகளின் வளர்ச்சி தடைபட்டு உள்ளது அறிந்து மனமுடைந்து போனேன்.

முறையான திட்டமிடல் மற்றும் இலக்கை அடையும் அணுகுமுறையால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை அரசால் நன்றாக பூர்த்தி செய்ய முடியும். ஒவ்வொரு குழந்தையும் சுகாதாரமுடன் உள்ளது என்ற வளர்ச்சி நிலையை உறுதி செய்வதற்கான வளங்கள் கர்நாடகாவில் உள்ளன என நான் நம்புகிறேன். அதற்கான தகுதி வாய்ந்தவர்களாகவும் அவர்கள் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளிடம் காணப்படும் குறைந்த அளவிலான ஊட்டச்சத்து அளவுகள் அவர்களின் வளர்ச்சி மற்றும் வருங்கால நலன்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதனையும் அவர் சுட்டி காட்டி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com