நான் மக்கள் உரிமைக்கான தர்ணா போராட்டத்தில் இருந்தேன்: ஜனாதிபதி விவகாரத்தில் மம்தா பானர்ஜி விளக்கம்

நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் சூழலில், தனியார் அமைப்புக்கு அதனை கையாள்வதற்கு ஏற்ற திறன் சரிவர இல்லை என எங்களுடைய தரப்பில் உங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.
நான் மக்கள் உரிமைக்கான தர்ணா போராட்டத்தில் இருந்தேன்:  ஜனாதிபதி விவகாரத்தில் மம்தா பானர்ஜி விளக்கம்
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர். பணியின்போது வாக்காளர்கள் பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன என மாநில அரசு குற்றச்சாட்டு கூறி உள்ளது. வாக்காளர்களை லட்சக்கணக்கில் நீக்கம் செய்ததில், அவர்களுடைய வாக்குரிமை பறிபோயுள்ளது என குற்றச்சாட்டு கூறிய மம்தா பானர்ஜி, இதுதொடர்பாக மேற்கு வங்காளத்தில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பழங்குடியின மாநாட்டிற்காக ஜனாதிபதி வருகையின்போது, மேற்கு வங்காள அரசு நிர்வாகம் சரிவர நடந்து கொள்ளவில்லை என்ற ஜனாதிபதி முர்முவின் புகார்களை நிராகரித்த மம்தா பானர்ஜி, அந்த நிகழ்ச்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை. நான் மக்களின் வாக்குரிமைக்காக தர்ணா போராட்டத்தில் பங்கேற்று இருந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

Also Read
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி
நான் மக்கள் உரிமைக்கான தர்ணா போராட்டத்தில் இருந்தேன்:  ஜனாதிபதி விவகாரத்தில் மம்தா பானர்ஜி விளக்கம்

ஜனாதிபதியை நாங்கள் கவுரவிக்கவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். எங்களுடைய மேயர் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். நான் தர்ணா போராட்டத்தில் இருந்தேன். அதனை விட்டு விட்டு பாதியில் நான் எப்படி வரமுடியும்? தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு வரை ஜனாதிபதி நிகழ்ச்சி பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நான் இந்த மக்களுக்காகவும், அவர்களின் வாக்குரிமைக்காகவும் போராடி கொண்டிருக்கிறேன் என கூறினார்.

ஜனாதிபதி நிகழ்ச்சி நடந்த அந்த பகுதி எங்களுக்கு சொந்தம் இல்லை. அது இந்திய விமான கழகத்தினுடையது. சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷா கூட அந்த பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினார்.

அதனால், ஏதேனும் தவறு என்றால், அது அவர்களுடைய தவறேயாகும். அதற்காக எங்களை ஏன் குற்றம் கூற வேண்டும்? இந்திய விமான கழகம் உங்களுடையது. பசுமை அறையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்பாடு செய்தனர். நாங்கள் அதனை தேர்ந்தெடுக்கவில்லை. எல்லாவற்றையும் நீங்களே தேர்வு செய்தீர்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் சூழலில், தனியார் அமைப்புக்கு அதனை கையாள்வதற்கு ஏற்ற திறன் சரிவர இல்லை என எங்களுடைய தரப்பில் உங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஜனாதிபதி முர்மு, அவராக விருப்பத்துடன் இந்த அழைப்பை ஏற்று சென்றிருக்கிறார். அதனால், அது அவருடைய தனியுரிமையாகும். எங்களுடையது அல்ல என மம்தா பானர்ஜி பதிலாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com