

டெல்லி,
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான இந்த விவகாரம், துருவ் ரத்தீ வெளியிட்டுள்ள வீடியோவால் கவனம் பெற்றுள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்றபோது, கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் பிரபல யூடியூபர் துருவ் ரத்தீயும் ஒருவர். இந்த நடவடிக்கை தொடர்பாக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து துருவ் ரத்தீ வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, காலை 7 மணியளவில் சாதாரண உடையில் வந்த சுமார் 20 பேர் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை; மாறாக, கடத்திச் சென்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சுமார் 23 மணி நேரமாகத் தனது வழக்கறிஞரைச் சந்திக்கவோ, செல்போனைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை என்றும் துருவ் ரத்தீ தெரிவித்துள்ளார். தன்னை வாகனத்திலேயே பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான இந்த விவகாரம், துருவ் ரத்தீ வெளியிட்டுள்ள வீடியோவால் கவனம் பெற்றுள்ளது.