

புதுடெல்லி,
தெலுங்கானா அளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி சந்தித்து நியமன ஆணையை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன். தமிழக மக்களின் பிரதிநிதியாக, தெலுங்கு மக்களின் சகோதரியாக செல்கிறேன்.
வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம், ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.