பிரக்யா சிங்கை உயிருடன் எரித்து விடுவேன் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிரட்டல்

பிரக்யா சிங்கை உயிருடன் எரித்து விடுவேன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்தார்.
பிரக்யா சிங்கை உயிருடன் எரித்து விடுவேன் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிரட்டல்
Published on

போபால்,

கோட்சேவை புகழ்ந்து பேசியதாக பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் குறித்து சர்ச்சை எழுந்தது. அவருக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம் பியோரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவர்த்தன் டாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், மகாத்மா காந்தி கொலையாளியை புகழ்வது போன்ற அருவறுப்பானது வேறு எதுவும் இல்லை. இப்போது பிரக்யா சிங்கின் கொடும்பாவியை எரித்துள்ளோம். அவர் என் தொகுதிக்கு வந்தால், உயிருடன் எரித்து விடுவோம் என்றார்.

அவரது மிரட்டல் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை உண்டாக்கியது. அவரது கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மாநில காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், கோவர்த்தன் டாங்கி நேற்று மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில், ராஜ்கார் மாவட்ட மக்கள், பிரக்யா சிங்கை புறக்கணிப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன். பேசும்போது தவறாகி விட்டது. நாங்கள் மகாத்மாவின் அகிம்சை கொள்கையை பின்பற்றுபவர்கள். எனவே, மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com